மகாசமாதி அடைந்தார்… திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவன துறவி சாரதானந்தர்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
thiruparaithurai swami attain mukthi
thiruparaithurai swami attain mukthi

திருப்பராய்த்துறை தபோவன துறவி சுவாமி சாரதானந்தர் இன்று மதியம் 2 மணி அளவில் மகாசமாதி அடைந்தார்கள்

ஏழை எளியவர்களுக்கும் இயற்கைச் சீற்றங்களால் பாதித்த மக்களுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்து சேவை பணிக்கான தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்ட சிறந்த இளம் துறவியாக விளங்கியவர் சுவாமிகள்

அவர் ஞாயிறு மதியம் 2 மணி அளவில் உடல் நலக்குறைவு காரணமாக மகா சமாதி அடைந்தார் என்ற செய்தியை கேட்டு ஆன்மிக உள்ளங்கள் பெரும் துயரில் மூழ்கியுள்ளன. அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் ஸ்ரீ சாரதானந்த சுவாமிகளது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கின்றது… என்று தகவல் வெளியிட்டது.

சாதுக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று, அகில பாரதிய சன்யாசிகள் சங்கத்தின் தலைவர் தவத்திரு மருதாசல அடிகள், பொதுச் செயலாளர் சுவாமி ஆத்மானந்தா சரஸ்வதி, பொருளாளர் சுவாமி வேதாந்தானந்தா ஆகியோரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.