கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் ரெஜினா. இவர் தற்போது ‘மிஸ்டர் சந்திரமெளலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த படத்தில் ரெஜினாவின் கவர்ச்சி கோலிவுட் திரையுலகை அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசவுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதால் தமிழ் டப்பிங் செய்வதில் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தை ‘நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய திரு இயக்கி வருகிறார்.
ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.