விலையில்லாப் பொருள் வாங்க வரிசையில் நின்று… கொரோனாவை விலைகொடுத்து வாங்கும் மக்கள்!

Published:

ration shop madurai
ration shop madurai
  • விலையில்லாப் பொருள் வாங்க இந்தக் கூட்டம்
  • ரேசன் கடையில் தான்
  • சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே திங்கள்கிழமை காலை விலையில்லா பொருட்களை வாங்கத்தான் இந்த நீண்டதூர வரிசை

மதுரை மஹால் அருகே பந்தடி ஆறாவது தெருவில் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், தமிழக அரசு சார்பில் கடந்த சில மாதங்களாக கொரோனவையொட்டி பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

இப் பொருட்களை பெறதான் ரேசன் கடையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த காலங்களில் ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க, விற்பனையாளர்கள் ஒரு நாளைக்கு இருநூறு கார்டுகள் வீதம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாம்.

அதேபோல், பொருட்களை விற்பனையாளர், ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க முயற்சி எடுத்தால், நீண்ட வரிசை வர வாய்ப்பில்லை என்கின்றனர் குடும்ப அட்டைதாரர்கள்.

இதை கண்காணிக்க, வட்டங்கள் தோறும் குடிமை பொருள் அலுவலர்கள், முதுநிலை கூட்டுறவு ஆய்வாளர்கள் பணியில் இருந்தும், ரேசன் பொருள்கள் வழங்குவதை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img