10 % இடஒதுக்கீடு! இப்போதுதான் முழுமையான வெற்றி!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
aswathaman
aswathaman

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டில் “வருமான மற்றும் சொத்து சான்றிதழ் ” வழங்கப்படும் .

ஏற்கெனவே அதை தாசில்தார்கள் வழங்க கூடாது என்று சொல்லப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றிருந்த நிலையில் , இப்போது அதை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உறுதி செய்துள்ளது தமிழக அரசு. அதாவது , இனி வழங்கப்படுவது வேறு ஒரு ஆணை மூலம் தடை செய்யப்படாது.

இப்போது தான் முழுமையான வெற்றி!

முன்னர் நான் இது குறித்து விசாரித்தவர்களிடம் கூறியிருந்தேன்…

பொருளாதாரத்தில் பினதங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக “வழக்கு தொடர்ந்த நீங்கள் , அதை மாநில அரசு திரும்ப பெற்றது தொடர்பான வெற்றிச் செய்தியை பகிர்ந்து கொள்ளவே இல்லையே என்று நண்பர்கள் கேட்டார்கள் ……

“சொத்து மற்றும் வருமான சான்றிதழ் ” வழங்குவதை தடை செய்யும் வகையில் மாநில அரசு உத்தரவு வழங்கியது. அந்த சான்றிதழ் இல்லை என்றால் மத்திய அரசு நிறுவனங்களில் இந்த 10% இட ஒதுக்கீட்டை அதன் பலனாளிகள் பெற முடியாது. அதை நாம் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வேறு சிலரும் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அதை போலவே , தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்குகளில் பதிலளித்த தமிழக அரசு, சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற அந்த உத்தரவை, அரசை ஆலோசிக்காமல் அந்த அதிகாரி வெளியிட்டுவிட்டார் (!).
அதை நாங்கள் திரும்ப பெறுகிறோம். இது குறித்து முடிவு செய்ய மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளோம் என்று கூறியது. அதன் விளைவாகவே அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

ஆனால் முழுமையான வெற்றி என்பது மாநில அரசு இறுதியாக என்ன முடிவு எடுத்து உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்பதைப் பொறுத்தது.

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக இந்த மூத்த மந்திரிகள் முடிவு எடுக்கலாம் . ஆனால், மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் தலையிட இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதாவது , இந்த சான்றிதழ் கொடுக்கலாமா ? வேண்டாமா ? என்று முடிவு செய்யும் அதிகாரம் கிடையவே கிடையாது.

நாம் தொடர்ந்த வழக்கு உட்பட எல்லா வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது .

அதில் , மாநில அரசு நாளை உயர்நீதி மன்றத்தில் என்ன சொல்கிறதோ , அதை பொறுத்து நமது அடுத்த கட்ட நகர்வு அமையும். ஆனால், மத்திய அரசின் அதிகாரமான “உயர்கல்வியிலோ” , அரசியலமைப்பு திருத்தத்திலோ மாநில அரசு தலையிட்டால் ( இது குறித்து ஏற்கெனவே விளக்கமாக பதிவிட்டுள்ளேன்) , நம்மால் வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும்.

நாளை முழுமையான வெற்றிச்செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு ஏற்ப, இன்று தமிழக அரசு தனது பதிலை நீதிமன்றத்தில் அளித்துவிட்டது.

  • அ.அஸ்வத்தாமன், பாஜக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.