தமிழகத்தைச் சேர்ந்த அமுதா, பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
amudha-ias
amudha-ias
  • தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
  • உத்தராகண்ட் முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் விரிவுரையாளராக தற்போது உள்ள அமுதாவுக்கு மத்திய அரசு பதவி வழங்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர்.

ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தராகண்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது, அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பதவிகளில் பணி செய்தவர். நேர்மையான அதிகாரி என மக்களிடம் பேர் எடுத்தவர். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றியவர்.

அவருக்கு இப்போது பிரதமர் அலுவலகத்தில் பணி அளித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம், தமிழகத்துக்கும் தமிழருக்கும் பிரதமர் அலுவலகம் நம்பிக்கையுடன் பொறுப்புகளை ஒப்படைக்கும் என்பது மீண்டும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.