
கனமழை காரணமாக… சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை முதலே கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை,சேப்பாக்கம், சாந்தோம், பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, அடையாறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நாளையும் கனமழை பெய்யும் என்று கூறப் படுவதால், நவ.1 நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.