
முனைவர் கு.வை.பா அவர்களின் வானிலை அறிக்கை,
31.10.2022, இரவு 22.15 மணி
தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இன்று (31.10.2022) காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை முதல் தொடர் மழை பெய்துவருவதாக செய்திகள் வருகின்றன.
படம் 1: 31.10.2022 மாலை 1730 மணியிலிருந்து வருகின்ற 10 நாள்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் பெய்யக்கூடிய மழை என கணினி வழிகாட்டுதலின் படம். நவம்பர் 1 – கனமழை; நவம்பர் 2-மிதமான மழை, அதற்கடுத்த எட்டு நாள்களுக்கு லேசான முதல் மிதமான மழை
படம் 2: இரவு 1000 மணிக்கு சென்னை டாப்ளர் ராடார் படம். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
படம் 3: இரவு 1032 மணிக்கு காரைக்கால் டாப்ளர் ராடாரின் படம். டெல்டா மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை நாளைக் காலை வரை பெய்யக்கூடும்.
படம் 4: செயற்கைக்கோள் படம். நெல்லூர் முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் இடி முகில்கள் காணப்படுகின்றன. இதனால் தமிழக, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் நாளைக் காலை வரை மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.