governor-tamilsai-and-cm-kcr
governor-tamilsai-and-cm-kcr
  • ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ராஜ் பவனுக்கு வந்த தெலங்காணா முதல்வர் கேசிஆர்.
  • பிரதமர் மோடியிடம் இருந்து போன் வந்த மறுநாளே கவர்னரோடு பேட்டி.

கொரோனாவை கட்டுப்படுத்துவது, சிகிச்சைகள் போன்றவற்றில் தெலங்காணா மாநிலம் தோற்றுவிட்டது என்று ஐகோர்ட்டு மற்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சில நாட்கள் முதலமைச்சர் யாருக்கும் தென் படாமல் போனது… அதே நேரத்தில் கவர்னர் ஆக்டிவாக கொரோனா பற்றி மீட்டிங்குகள் நடத்தியது, மாநிலத்தில் கவர்னரின் ஆட்சி, ஹைதராபாதில் செக்ஷன் 8 விதிப்பதற்கு டிமாண்ட் அதிகமாவது…. போன்ற பல பரிணாமங்களின் பின்னணியில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு முதல்வர் கேசிஆர், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரையாடினார்.

governor-tamilsai-and-cm-kcr1
governor-tamilsai-and-cm-kcr1

கொரோனா கேசுகள் மீண்டும் மிக அதிக அளவில் பதிவாகி வரும் மாநிலங்களில் தெலங்காணா கூட இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறு அன்று இரவு திடீரென்று போன் செய்து முதலமைச்சர் கேசிஆரோடு பேசினார். தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீது பரிசீலனை செய்தார். மோடியின் போன் கால் வந்த மறுநாளே கேசிஆர் ராஜ்பவன் வந்தது நிகழ்ந்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

இறுதி முறையாக மாநிலம் தோன்றிய தினமான ஜூன் 2அன்று கவர்னரை சிஎம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அண்மையில் பல்வேறு பரிணாமங்களுக்குப் பிறகு இத்தனை நாள் கழித்து சந்தித்ததால் பலவித அம்சங்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

செகரடேரியட் இடித்தல், புது கட்டடங்கள் நிர்மாணம் தொடர்பாக விவரங்களை முதல்வர் கேசிஆர் கவர்னருக்கு தெரிவித்தார் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீது கவர்னர் கேள்வி கேட்டார் என்றும் மாநில வாரியாக எடுத்து வரும் நடவடிக்கைகளை கூட சிஎம் அவருக்கு தெரிவித்தார் என்றும் தெரிகிறது.

அதேபோல் கவர்னர் கோட்டாவில் உள்ள இரண்டு எம்எல்சி பதவிகள் குறித்து கூட சிஎம் கலந்துரையாடினார் என்று தெரிகிறது. ராஜ் பவனில் இருந்து மீண்டும் பிரகதி பவன் வந்த கேசிஆர் இரிகேஷன் துறை அதிகாரிகளோடு கலந்து பேசினார்.

தெலங்காணாவில் கொரோனா நிலைமை பற்றி திங்களன்று நடந்த விசாரணையில் ஐகோர்ட்டு தீவிரமாக விமர்சித்தது. அண்டை மாநிலமான ஆந்திராவில் டெஸ்டுகள் மிகவும் அதிகமாக செய்து வருகையில் இங்கு மற்றும் அரசாங்கம் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்றும் மக்களை இஷ்டத்திற்கு விட்டு விட்டார்கள் என்றும் கோர்ட் உத்தரவுகளை அமல் செய்வதில்லை என்றும் சீப் ஜஸ்டிஸ் தர்மாசம் சூடாக விமர்சனம் செய்தார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

தெலங்காணாவில் இதுவரை 2.65 லட்சம் டெஸ்டுகள் செய்துள்ளார்கள். 45 ஆயிரத்துக்கும் மேலாக கேசுகள் பதிவாகி உள்ளன. அதில் 32 ஆயிரத்து 438 பேர் இதுவரைக்கும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார்கள். 12,324 ஆக்டிங் கேசுகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending