இன்னுமா கெளம்பல… ElA எதிர்ப்பு போராளி!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை
eia-image
eia-image

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை வாய்ப்பு இழந்தவர்களுக்கும், டிக் டாக் மூடியதால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் மத்திய அரசு அளித்துள்ள பொன்னான வேலை வாய்ப்பு :

ElA எதிர்ப்பு போராளி !

புதிய போராட்ட யுத்திகளை பயன்படுத்துவோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை உண்டு.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கத்தில் தான் EIA வரைவு தமிழில் வெளியிடப்படவில்லை என்று இன்னுமா யாரும் கிளம்பவில்லை ?

இயற்கையாக இருந்த காடுகளை அழித்து விவசாய நிலங்களாக ஆதிமனிதன் மாற்றியது தான் சுற்றுச்சூழலின் முதல் அழிவு.
அதனால,……….

தன் போக்கில் மாறி மாறி பல திசைகளில் ஓடிக்கொண்டிருந்த ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி ஆறுகளின் போக்கை கட்டுப்படுத்தியதுதான் மனிதன் இயற்கையான சூழ்நிலையை மிக தீவிரமாக மாற்றிய அடாவடி செயல்.

வெள்ள அளவிற்கேற்ப ஆறுகள் தனது திசையை தனக்கு வேண்டிய போது மாற்றிக் கொள்ள விட வேண்டும்.
அதனால…….

மனிதன் தனது தேவைகளுக்காக இயற்கை நிலப்பரப்பை மாற்றி ஏரி, குளம், குட்டை வெட்டி நீரை தேக்கியது இயற்கைக்கு முற்றிலும் மாறானது.
அதனால………..

இயற்கையுடன் இயைந்து வேட்டையாடி, காட்டில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு தான் ஆதி மனிதன் வாழ்ந்த போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலிருந்தது.
அதனால……..

ஆற்றில், ஆங்காங்கே இயற்கையாக தேங்கியிருந்த நீரை கொண்டு தான் ஆதி மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான். வீட்டுக்கொரு கிணறு, தோட்டத்திற்கு ஒரு ஆழ்துளை கிணறு தோண்டியதுதான் சுற்றுச்சூழலை மிக மோசமாக பாதிக்கும் செயல்.
அதனால……….

காட்டில் இயற்கையாக திரிந்த ஓநாய், குதிரை, மாடு, யானை ஆகியவற்றை பழக்கி தன்னோடு வைத்துக் கொண்டது தான் இயற்கைக்கு எதிரா மனிதர்களின் செயல்களில் மிக மோசமானது.
அதனால….

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கத்தில் தான் EIA வரைவு தமிழில் வெளியிடப்படவில்லை என்று இன்னுமா யாரும் கிளம்பவில்லை ?

  • மு. ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.