தமிழகத்தின் நட்ட ‘நடுநிலை’ செய்தி சேனல்கள்… டிவி.,க்கள் இவை!

Reporters Diary உரத்த சிந்தனை சற்றுமுன்

sun tv kalaignar tv logo - 2026

தேர்தல் நெருங்க நெருங்க சமூக வலைத்தளங்களில் தங்கள் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து கொள்பவர்களின் வேகமும் அதிகரித்து வருகிறது.

ஊடகங்களில் தங்கள் குரல்களை எழுப்ப இயலாதவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை பகிரங்கப்படுத்தி வருகின்றனர். தேர்தல் நடத்தைக் கட்டுப்பாடுகள், இந்த முறை ஊடகங்களுக்கு மட்டுமில்லாமல் சமூக ஊடகங்களுக்கும் உண்டு என்று தேர்தல் ஆணையம் சொன்னாலும், அவற்றை எல்லாம் பெரிதும் கவனித்துக் கொள்பவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சமூக ஊடகங்களில் பிரசாரங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

செய்திகளை தங்களுக்கு ஏற்றார்ப் போல், தங்கள் வெற்றிக்கான வழியை உறுதி செய்வது போல், தமிழகத்தில் செய்தி ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம், அவற்றை நிர்வகிப்பவர்கள் அனைவருமே கட்சிகளின் பின்புலத்தில் உள்ளவர்களே~!

தொடக்க காலத்தில் முரசொலி, நமது எம்ஜிஆர் போன்ற அரசியல் பிரசார பத்திரிகைகளை நடத்தியவர்கள் பின்னாளில் ஊடகங்களை நடத்தத் தொடங்கினர். அவற்றில் பிரதானமாக இருப்பவை, திமுக.,வின் காட்சி ஊடகங்களே.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

ஆளும் அதிமுக.,வுக்கு ஒரு ஜே நியூஸ் செய்தி சேனல், முன்னர் அதிமுக.,வுக்கும் தற்போது டிடிவி., தினகரனுக்குமான ஒரு ஜெயா டிவி.,  நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும் மறைமுக அரசியலில் உள்ள நியூஸ் 7, வணிக ரீதியாக இயங்கினாலும், அரசியல் சார்புள்ளவர்களின் ஆசிரியர் குழு பின்னணியில் இயங்கும் நியூஸ் 18 என்று செய்தி சேனல்கள் உள்ளன.  இவை எல்லாம் தங்களை நடுநிலை செய்தி சேனல்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை.

ஆனால், தங்களை நடுநிலை செய்தி சேனல்கள் என்று சொல்லிக் கொண்டு மக்களிடம் முன் நிற்கும் சேனல்கள் குறித்து சமூக ஊடகங்களில் இதனைப் பகிர்ந்து வருகிறார்கள். தேர்தல் அரசியலில் முன் நிற்கும் இந்த ஊடகங்களின் பின்னணியைப் பற்றி பகிரப்படும் தகவல் இது…

1)”சன் டிவி” ஓனர் – திமுக வேட்பாளர்.

2)”கலைஞர் டிவி” ஓனர் – திமுக வேட்பாளர்.

3)”புதிய தலைமுறை” ஓனர்-திமுக வேட்பாளர்.

4)”மெகா டிவி” ஓனர் – திமுக+காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்.

5)”வசந்த் டிவி” ஓனர் – திமுக+ காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

6)”மதிமுகம் டிவி” ஓனர் – திமுக + மதிமுக கூட்டணி வேட்பாளர்.

7)”வெளிச்சம் டிவி” – திமுக கூட்டணி வேட்பாளர்…

எனவே எல்லா செய்திகளும் மிக மிக நடுநிலையோடு வரும் என கூறி…
இந்த டிவிக்களை பார்க்கும் நேயர்களுக்கு “பெப்பே” காட்டப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.