கோயம்பேடு மெட்ரோவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
metro train - 2026

சென்னையின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர்‌ அண்ணா ஆலந்தூர்‌ மெட்ரோ’ என்றும், சென்ட்ரல்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை கோயம்பேடு புறநகர்‌ பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும்‌ வகையில்‌, கோயம்பேடு மெட்ரோவுக்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.