லவ் ஜிஹாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா; விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

Published:

ranji love jihad tara case - 2026

ராஞ்சி: லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாராவுக்கு விவாகரத்து வழங்கி ராஞ்சி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் கோலி என்கிற ரஹிபுல் ஹசன். இவர், ஹிந்து மதத்தைச் சேர்ந்த தாரா சஹதேவ் என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை 2014ல் தாம் ஒரு முஸ்லிம் என்று கூறாமல் மறைத்து, ஹிந்து பெயரில் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அதன் பின்னர் அவர், தனது மனைவி தாராவை முஸ்லிமாக மதம் மாறும்படி நெருக்கடி கொடுத்தார். இந்தப் பின்னணி குறித்து அறிந்து அதிர்ந்த தாரா, 2014 ஆகஸ்ட் 19ல் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டது. இதை அடுத்து ரஞ்சித் சிங் கோலி என்ற ரஹிபுல் ஹசன் தில்லியில் வைத்து ஆகஸ்ட் 26ம் தேதி கைது செய்யப் பட்டார்.

love jihad - 2026

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டில், லவ் ஜிஹாத் என்பது அடித்தளமாக இருந்ததால், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

பின்னர் தனக்கு விவாகரத்து கோரி, 2017 ம் ஆண்டில் ராஞ்சி குடும்ப நல நீதிமன்றத்தில் தாரா சஹதேவ் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பி.கே. கௌதம், தாரா அவரது கணவரால் அடித்து துன்புறுத்தப் பட்டு, கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது என்றும், அவரை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்றும் கூறி அவருக்கு விவாகரத்து வழங்கினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img