சிவன்மலை ஆண்டவன் உத்தரவு… பாஜக., முழு வெற்றி பெறும்!

அடடே... அப்படியா? கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sivanmalai andavan - 2026

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு சுட்டிக் காட்டுவது, பாஜக., முழு வெற்றியைப் பெறும் என்பதைத்தான் என்று கூறுகின்றனர் அக்கட்சியினர்!

சிவன் மலை ஆண்டவன் உத்தரவாக, இந்த முறை, வெள்ளிவேலின் முன்பகுதியில் ஓம் என்றும் பின்பகுதியில் தாமரைப்பூவும் இருப்பது போல் வைக்கப் பட்டுள்ளது. இது வேல் யாத்திரை மூலம் எழுச்சியை ஏற்படுத்திய பாஜக.,வுக்கு வெற்றிமுகமாக அமையும் என்று கூறுகின்றனர்.

சுவாமியிடம் உத்தரவு கேட்டு தற்பொழுது அந்த பெட்டியில் அதே போன்றதொரு புது வெள்ளிவேல் செய்து வைத்திருக்கிறார்கள்.

திருப்பூரை சேர்ந்த வேலாயுதம் யாதவ் (32) என்ற பக்தரின் கனவில் மார்ச் 19 2021 அன்று சாமி தோன்றி வெள்ளிவேலின் முன்பகுதியில் ஓம் என்றும் பின்பகுதியில் தாமரைப்பூவையும் வரைந்து பெட்டியில் வைக்கச் சொல்லியிருக்கிறார் சிவன் மலை ஆண்டவர்…

இந்தத் தேர்தல் போட்டியே, முருகனுக்கும் திமுக விற்கும் இடையேதான்! திமுக.,வை சூரசம்சம்ஹாரம் செய்து வெற்றி பெறப்போவது வேல்தான் ….. வெற்றிவேல் வீரவேல் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாஜக.,வினர்.

  • கே.சி.கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.