திருடியதாகக்கூறி எடைக்கல்லால் அடித்து கொடூரம்! சிறுவன் உயிரிழப்பு!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
kaithu
kaithu

10 வயது சிறுவனின் தவறு செய்ததிற்காக வித்யாசமான தண்டனை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகைய்யா ஹிரேமத் கர்நாடக மாநிலம் கவேரி மாவட்டம், விப்பனாசி கிராமத்தில் இவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் அவருடைய 10 வயது மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி, அந்த சிறுவன் அருகில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க சென்று நீண்ட நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அந்த சிறுவனை தேடி அந்த கடைக்கு சென்ற போது அந்த சிறுவன் கடையில் கடை ஓனர் பணம் திருடியதாக கூறி கடை உரிமையாளர்கள் சிறுவனை கொடூரமாக தாக்கியதோடு சிறுவனை அங்கிருந்து விட மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சிறுவனின் முதுகில் கனமான கற்களையும் அவர்கள் சுமக்க வைத்த போது பெற்றோர்கள் கடை உரிமையாளரிடம் கெஞ்சிக்கேட்டும் அவர்கள் அதை காதில் வாங்காமல் மாலையில் தான் சிறுவனை விடுவித்ததை அடுத்து அந்த சிறுவன் மார்ச் 19 அன்று, ஹுப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஆனால் மார்ச் 22 ஆம் தேதி சிகிச்சைப்பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இறந்த சிறுவன் மருத்துவமனை படுக்கையில் இருந்து தனக்கு நடந்த கொடுமைகளை விவரிக்கும் போது தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகவும் முதுகில் கனமான கல் எடைகளை வைத்து கொடூரமாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட கடை உரிமையாளர்கள் பிரவீன் கரிஷெட்டர், அவரது தாயார் பசவன்னேவா கரிஷெட்டர், தாய்வழி தாத்தா சிவருத்ரப்பா ஹவேரி மற்றும் மாமா குமார் ஹவேரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.