ராஜஸ்தான் ஸ்பெஷல்: மால்புவா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot 2020 0801 170745 - 2026

மால் புவா (Malpua)

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்
பால் – அரை கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
தயிர் – கால் கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பிஸ்தா – 2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய்/நெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து பாகு காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி வைத்துக்கொள்ளவும். அதில் சோம்பு, கோதுமை மாவு, மீதம் இருக்கும் சர்க்கரை, நறுக்கிய பிஸ்தா, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

அதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்/நெய் விட்டு சூடானதும் மாவை சின்னக் கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக இருபுறமும் வேகவைத்தெடுக்கவும். எண்ணெய்/நெய் வடித்து எடுத்து, தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைத்து எடுத்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.