ஆக.10 முதல் சிறிய வழிப்பாட்டு தலங்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறக்க அனுமதி! முதல்வர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
kovil-driving

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகுக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் முன்பை விட குறைந்துள்ளது. அதிலும் சென்னையில் பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. தற்போது ஏழாம் கட்ட பொதுமுடக்கம் நிலவி வரும் நிலையில், தொடர்ந்து தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வரும் திங்கள் கிழமை (ஆகஸ்ட் 10, 2020) முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதே போல், சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம். ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

ஏற்கனவே பொது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.