ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழாவில் ஐந்து கருடசேவை..

Published:

IMG 20220729 WA0020 - 2026
795500 5karda - 2026

இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு ஐந்து கருடசேவை நடந்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் இரு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் வியாழக்கிழமை இரவு ஐந்து கருடசேவை நடந்தது.

IMG 20220729 WA0017 1 - 2026
IMG 20220729 WA0016 1 - 2026
IMG 20220729 WA0014 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வியாழக்கிழமை 5-ம் திருவிழாவான ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு பெரியாழ்வார் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஆடிப்பூர மண்டபத்தை வந்து அடைந்தார். அதன் பிறகு பெரிய பெருமாள், திருத்தங்கல் பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், ரெங்கமன்னார், ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் வீற்றிருக்க, பெரியாழ்வார், ஐந்து பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
IMG 20220729 WA0008 - 2026
IMG 20220729 WA0007 - 2026

அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு ஐந்து கருடசேவை நடந்தது. கருட வாகனங்களில் ஐந்து பெருமாள் எழுந்தருளி மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக உற்சவம் நடைபெற்றது.தமிழககம் மற்றும் வெளிமாநில கண்களில் இருந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒயிலாட்ட குழுவினர் மற்றும் கோலாட்ட குழுவினர் கோலாட்டம் ஆடியபடியும், பஜனை குழுவினர் பஜனை பாடிய படியும், வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.வரும் ஆக 1ஆம் தேதி திருஆடிப்பூரம் நாளில் திரு தேரோட்டம் நடைபெறும்.

IMG 20220729 WA0006 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img