அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்: கேரள விபத்திற்கு ஏ.ஆர்.ஆர் ட்விட்!

Published:

colicode

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நீர்நிலைகள் நிரம்பி வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

அத்துடன் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் புதையுண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் தமிழர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி கேரளாவை சுற்றி பல துயர சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அரங்கேறி வந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற விமான விபத்து மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமாக 120 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்னிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img