நாட்டுப் பற்றை வெளிப்படுத்த எல்லா மசூதிகளிலும் தேசியக் கொடி பறக்க வேண்டும்!

இந்தியா உரத்த சிந்தனை உலகம் சற்றுமுன்

hui mosque in china - 2026

பீஜிங்: எல்லா மசூதிகளிலும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் தேசியக் கொடியைப் பறக்க விட வேண்டும். இந்தக் கண்டிப்பான உத்தரவு நிச்சயமாக இங்கல்ல, அண்டை நாடான கம்யூனிஸ சீனாவில்தான்!

சீனாவின் மிக முக்கியமான இஸ்லாமிய ஒருங்கமைப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, அந்த அமைப்பு இத்தகைய நெறிமுறையைக் கூறியுள்ளது. சீன நாட்டின் கொடி, மசூதிகளில் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் பிரதான இடத்தில் பறக்கவிடப் படவேண்டும். இந்தத் தகவலை சீன இஸ்லாமிய அசோஷியேஷன் தனது இணையதளத்தில் கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையால் தேசிய மற்றும் சமூக அடையாளத்தை சரியான வகையில் இஸ்லாமியர்கள் பெற வழி செய்யும் என்றும், அவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்க இது உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீன இஸ்லாமிய அசோசியேஷன், அரசு சார் அமைப்பு என்பதுடன், இமாம்களை தேர்வு செய்வதும் இந்த அமைப்பின் முக்கிப் பணி. அந்த வகையில் அரசின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு செயல்படுவதால், அரசின் கொள்கைகளை அது செயல்படுத்தியாகவேண்டும்.

மேலும், சீனாவில் புதிய மதக்கட்டுப்பாட்டு சட்ட திட்டங்கள் கொண்டு வரப் பட்டுள்ளதாலும், மசூதிகளில் பணிபுரியும் நபர்கள் சீன சட்டதிட்டங்களை அறிந்து கொண்டு அதன்படி நடப்பதுடன், மதக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி செயல்படவேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவிலுள்ள மசூதிகளில் சீன தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் !

கம்யூனிஸ சித்தாந்தக் கருத்துக்களை மசூதிகளில் எழுதி வைக்க வேண்டும் !

சீனாவில் தோன்றிய முஸ்லீம் பிரபலங்களைப் பற்றி மட்டுமே போதிக்க வேண்டும் ! அயல் நாட்டவர்களைப் பற்றி போதிக்கக் கூடாது!

ஆனால், உலகில் அதிக அளவு இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட நாடு என்று கூறப்படும் இந்தியாவில் நிலை என்ன?

இப்போது எந்த இந்திய கம்யூனிஸ்டும் எவரும் சீனாவைப் பார் என்று பேச மாட்டார்கள்! இந்தியாவில் இந்திய தேசியக் கொடி கூட வேண்டாம் … ஐ.எஸ்.ஐ.எஸ்., டி-ஷர்டுடன், ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பாகிஸ்தான் கொடி பிடிக்கும் முஸ்லீம்களையாவது சீனச் சிகப்புப் பிரஜைகளான இந்திய கம்யூனிஸ்டுகள் கண்டிப்பார்களா?

பண்பாட்டுக்குப் புறம்பான, அன்னிய மதங்கள் தேசிய அபாயம் என்று சரியாகப் புரிந்து வைத்துள்ளது சீனா! இந்த அறிவு எப்போது இந்தியாவிற்கு வரும்? இதுதான் இந்திய தேசியவாதிகளின் ஒரே கேள்வி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.