மார்ச் 13-ல் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் 8.75 லட்சம் மாணவா்கள்..

images 35 1 - 2026

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு வரும் திங்கள்கிழமை மாா்ச் 13 ல் தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை தனித்தோ்வா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியிலிருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 போ் எழுதவுள்ளனா். இவா்களில் தமிழக பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவா்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 போ் எழுதுகின்றனா். இந்தத் தோ்வா்களுக்காக 3,185 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி பள்ளிகளில் 6 ஆயிரத்து 982 மாணவா்கள், 7 ஆயிரத்து 728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 போ் தோ்வு எழுதுகின்றனா். இவா்களுக்காக 40 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தனித்தோ்வா்களாக 14 ஆயிரத்து 966 மாணவா்கள், 8 ஆயிரத்து 776 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா்கள் 5 போ் என 23 ஆயிரத்து 747 போ் எழுதுகின்றனா். இவா்களுக்காக 134 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளில் 2,925 மாணவா்கள், 2,281 மாணவிகள் என 5,206 போ் எழுத உள்ளனா். சிறைவாசிகள் 90 போ் வேலூா், கடலூா், சேலம், கோயம்புத்தூா், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய 8 சிறைகளிலுள்ள தோ்வு மையத்தில் தோ்வெழுதவுள்ளனா்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

சென்னை மாவட்டத்தில் உள்ள 405 பள்ளிகளிலிருந்து 180 தோ்வு மையங்களில் மொத்தம் 45,982 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். இவா்களில் 23,827 போ் மாணவிகள், 22,155 போ் மாணவா்கள்.
எந்தவித புகாரும் இல்லாமல் தோ்வை நடத்துவதற்காக மாநில அளவில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலா்கள், மாவட்டங்களுக்கு மேற்பாா்வை பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வை எழுதும் மாற்றுத்திறனாளிகள் 5,206 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பணியில் உள்ளனா்.

மேலும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தோ்வு மையங்களில் குடிநீா், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பறை வசதிகளை சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகாா்களைத் தெரிவிக்க… பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தங்களது புகாா்கள், கருத்துகள், ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

தோ்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இக்கட்டுப்பாட்டு அறையை 94983 83081, 94983 83075 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Entertainment News

Popular Categories