சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு! இளைஞர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0813_204445

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள பிச்சிவாக்கம் பகுதியை சார்ந்தவர் கண்ணன். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரி பிச்சிவாக்கம் பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார்.

இதனையடுத்து கண்ணன் அங்கு கட்டுமான பணிக்காக சென்ற நிலையில், சகோதரியின் இல்லத்திற்கு அருகே வசித்து வரும் 11 வயது மற்றும் 6 வயது சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் பதறிப்போன சிறுமிகள் இருவரும், இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.