தமிழகத்தில் இன்று… 5,986 பேருக்கு தொற்று; 116 பேர் மரணம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,986 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,61,435 பேராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 73,162 பேருக்கும், இதுவரை 38,51,411 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் எண்ணிக்கை 6,239 பேராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,742 பேர் உள்பட, இதுவரை 3,01,913 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 53,283 என்றும், தொற்று அடைந்தவர்களில் இதுவரை 83.53 % குணமடைந்துள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 4 தினங்களாக மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் 1,177 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதை அடுத்து, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு இதுவரை 1,21,450 பேர் என அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புக்கு சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 12,287 ஆக உள்ளது… என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

district-wise-covid-19-details-aug-20
district-wise-covid-19-details-aug-20

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.