உலகத்தில் பணக்காரர்கள் குணசாலிகள் பராக்கிரமசாலிகள் இருப்பார்கள் அவர்கள் எல்லோருக்கும் சில குணங்கள் இருந்தால்தான் அது இன்னும் சோபிக்கும்.
பணக்காரனுக்கு தானம் செய்யும் சுபாவம் இருக்க வேண்டும் அது இல்லாமல் போனால் எவ்வளவு பெரிய பணம் இருந்தாலும் வீண்தான் இகத்திலும் பரத்திலும் சுகம் கொடுக்கக் கூடியது தானம்.
நல்ல குணம் உள்ள மனிதனுக்கு அடக்கம் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் எவ்வளவு குணவானாக இருந்தாலும் பிரயோஜனமில்லை அடக்கம் உள்ள குணவானை எல்லோரும் மதிப்பார்கள் அவனால் பல பேருக்கு உபகாரமாக இருக்கும்.
பராக்ரமம் இருக்கிறவன் அவனுடைய சக்தியோடு ஒத்தவர்கள் உடன் அதை காட்ட வேண்டும் எல்லோரையும் தண்டிக்க அதனை உபோயோகித்தால் அது மிக தவறாகும். தவறுகளை தட்டிக்கேட்கவே உபயோகம் செய்ய வேண்டும்.
பிராமணனுக்கு பொறுமை ரொம்ப தேவை பொறுமை இருக்கும் பிராமணனை எல்லோரும் மதிப்பார்கள் ஒரு அரசன் மிக தர்மமாக இருந்து ராஜ பரிபாலனம் செய்ய வேண்டும் ராஜா தர்மத்தை மதிக்க வில்லை என்றால் அந்த ராஜ்யத்தில் இருக்கும் மக்களுக்கு ஷேமம் இருக்காது ஆகையால் ஜனங்கள் இதன்படி சன்மார்க்கத்தை அனுசரித்து தங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கி கொண்டால் இது கிருதயுகம் ஆகவே ஆகிவிடும் .
தனி தாதா நம்ர: சூர: சாந்தோ நிஜ: க்ஷமீ மூலம் கிருதயுகஸ்யைதத்
தர்மசீலஸ்ய பூபதி:!!