யாருக்கும் என் வலி வர வேண்டாம்: நடிகை ரைசா!

Published:

raiza scaled
raiza scaled

பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்த இவர், தற்போது காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அண்மையில் ரைசா வில்சன், தோல் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கு செய்த dermal fillers சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக பரபரப்பு புகார் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி ஒரு கோடி நஷ்ட ஈடும் கேட்டிருந்தார்.

ஆனால் மருத்துவர் பைரவியோ ரைசா மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், ரைசாவுக்கு ஏற்பட்டிருப்பது பக்க விளைவுகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் மருத்துவத்துறை விதிமுறைகளை மீறி மக்களுக்கு மருந்து பரிந்துரைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் மருத்துவர்களின் செயல்கள் சட்டவிரோதமானவை.

bhairavi
bhairavi

டாக்டர் பைரவி செந்தில் பல்வேறு சமூக வலைதளங்களில் விடுத்திருந்த விளம்பரங்களை வைத்தே, அழகை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட சில சிகிச்சைகளை செய்துகொள்ள அவரை நான் அணுகினேன்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

டாக்டர் பைரவி செந்தில் மற்றும் அவரது ஊழியர்களின் அலட்சியமான போக்கால் பாதிக்கப்பட்ட பெண் நான். எதிர்காலத்தில் யாரும் எனது வலியை அனுபவிக்கக் கூடாது. ஒரு நடிகையாக, எனது செயல்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்துக்கு நான் பொறுப்பு என நினைக்கிறேன்.

எனவே, இனி அப்பாவி மக்கள் யாரும் டாக்டர் பைரவி செந்திலின் சிகிச்சையால் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய, தேசிய மருத்துவ ஆணையத்திடமும், தமிழக மருத்துவ கவுன்சிலிலும், டாக்டர் பைரவி செந்தில் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக நான் புகார் அளித்துள்ளேன். அவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்குப் பின் அதிகாரிகளின் முடிவு தெரியவரும்.

கடைசியாக, தவறான சிகிச்சைக்காக டாக்டர் பைரவி செந்திலிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

இந்தச் சட்ட நடவடிக்கையில் எனக்குக் கிடைக்கும் நஷ்ட ஈட்டை, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடையாக அளிக்கவிருக்கிறேன்.

நீதித்துறையின் மீதிருக்கும் நம்பிக்கையுடன், மக்களுக்கு என்றுமே சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார் ரைசா வில்சன்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img