ஒண்டி வீரன் நினைவிடத்தில் அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
ondiveeran-memorial
ondiveeran-memorial

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்சுந்தர் தயாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவல் பச்சேரியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவிடம் உள்ளது. ஒண்டிவீரனின் 249வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு ஆதிதிராடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் சென்று ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் ஒண்டி வீரன் வாரிசுதாரர்கள் நான்கு நான்கு பேர்களாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதர அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

ஒண்டி வீரன் நினைவு நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மேற்பார்வையில் 8 டி.எஸ்.பி.,கள், 20 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 20 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டது.

மேலும் பைக் மற்றும் வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.