ஆபீச தொறந்து வெச்சி… ஒரு நாயும் வரல்லன்னு சொல்ல முடியாதுல்ல..!

சற்றுமுன் திருச்சி புகார் பெட்டி
dog-inside-the-office
dog-inside-the-office
  • லால்குடி வட்டாச்சியர் அலுவலக உள் வளாகத்தில் சுற்றி வரும் நாய்கள்!
  • கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் கிடந்த ஊழியர்கள்!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பணி செய்யும் இடத்தில் நாய்கள் அலுவலகத்தின் உள் வளாகத்தில் சுற்றி வருகிறது. அங்கு பணி செய்யும் ஊழியர்கள் அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருந்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

கடைநிலை ஊழியர்கள் முதல் வட்டாச்சியர் வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். நாய்களை விரட்ட யாரும் முன் வரவில்லை

அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் நாய்கள் இருப்பதை கண்டு அஞ்சி அலுவலத்தின் உள்ளே செல்லாமல் பயந்து கொண்டு வெளியே நின்றனர்.

ஒரு வேளை மக்களுக்கு பணி செய்யாமல் தவிர்ப்பதற்காக நாய்களை வளாகத்திற்குள் விட்டார்களா என மக்களுக்கு ஐயம் ஏற்பட்டது.

எனவே வரும் காலங்களில் நாய்கள், பூனைகளை அலுவலக வளாகத்தில் விடாமல் பார்த்துக் கொண்டு பொதுமக்கள் அச்சமின்றி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வர ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் குமுறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.