தமிழகத்தில் இன்று… 5975 பேருக்கு கொரோனா; 97 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 97 பேர் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் .அதே நேரம் தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் 

தமிழகத்தில் இன்று 5975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,79,385ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,389ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இது அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து  கரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,517ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 70,127 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதையடுத்து தமிழகத்தில் இதுவரை   தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 40,63,624 ஆக உயர்ந்துள்ளது 

 சென்னையை அடுத்து உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 354 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 222 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :

district-wise-corona-aug-23
district-wise-corona-aug-23

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.