காரை தடுத்த காவலாளியை செருப்பால் அடித்த பெண்! போலீசில் புகார் செய்த வாட்ச்மேன்!

இந்தியா சற்றுமுன்
The-woman-who-hit-the-gatekeeper

அனுமதியின்றி உள்ளே வந்த காரை தடுத்து நிறுத்திய வாட்ச் மேனை பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தின் சந்தர நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் பெண்கள் இருவர் காரில் வந்தனர். அவர்களை கேட்டில் நிறுத்திய வாட்ச்மேன் அனுமதியின்றி உள்ளே நுழையக்கூடாது என தெரிவித்தார்.

இதனால் பெண்களுக்கும் வாட்ச் மேனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் காரில் இருந்த பெண் இறங்கிச் சென்று வாட்ச்மேனை தனது செருப்பால் அடித்தார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவியாகியுள்ளது. பெண் அடித்ததும் வாட்ச் மேன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு பெண்கள் மீதும் அந்த வாட்ச்மேன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் இரண்டு பெண்கள் யார் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். வாட்ச் மேனை பெண் செருப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.