மளிகை பொருள் வாங்கச் சென்ற 13 வயது சிறுமி! மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை கடத்திய 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள குர்ஜர்பாடா கிராமத்தில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இவர்களின் 13 வயது பெண் நேற்று மளிகைப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சிறுமியை தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காததை அடுத்து அவர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுமி அருகில் உள்ள ஒரு வயலில் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் அங்கு சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திருந்த மூன்று உள்ளூர் இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில் மூன்று பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் மூவரையும் போக்ஸோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.