நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
vadivel-balaji

சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 42.

திரைப்பட காமெடி நடிகர் வடிவேலு செய்யும் காமெடிகளை தத்ரூபமாக அவரது பாணியிலேயே செய்பவர் சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. அவர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தார். பின்னர், அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். சின்னத்திரை மட்டுமல்லாது, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் சில வேடங்களில் நடித்துள்ளார்.

vadivel-balaji1

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் நடிகர் வடிவேல் பாலாஜிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள் அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தார் பத்து நாட்களுக்கு முன்பு மறுபடியும் அவருக்கு உடல்நிலை மோசமானது.

அதனை அடுத்து, கை, கால்கள் செயலிழந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு அதிக செலவானதாக கூறப்படுகிறது.

அதனைத்அதனைத் தொடர்ந்து விஜயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

vadivel-balaji2

ஆனால், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.