அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
SUSIED MAN

தேவகோட்டையை அடுத்து அண்ணா சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48). இவரது மனைவி பெயர் அமுதா. இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும், அஸ்விதா என்ற மகளும் உள்ளனர்.

இந்த தம்பதியர் கலப்பு திருமணம் செய்ததால் அதனடிப்படையில் ஆசிரியர் பணி அரசு வழங்கப்பட்டது . அதன்படி கார்த்திகேயன் தேவகோட்டை அருகே சமூகநாதபட்டிணம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே சில மாதங்களாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. அப்படி நேற்று இரவும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் விரக்தியடைந்த கார்த்திகேயன் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறி ராம் நகரில் உள்ள தனியார் டென்னிஸ் கிளப்பில் உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் .

இவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பொதுமக்கள் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் . இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.