தனிமைக்குத் தடை: 3 வயது குழந்தையை கொன்ற கள்ளக் காதலன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
manusri

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் ராமதாஸ். 30 வயதாகிறது. அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்க்கிறார்.

இவர் கடந்த 10-ந் தேதி ஒரு பெண்ணை அழைத்து கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்து லாட்ஜில் ரூம் போட்டார். அந்த பெண் ஏற்கனவே கல்யாணமானவர் போல தெரிகிறது.. கையில் 3 வயது குழந்தையும் உள்ளது.. அந்த குழந்தையுடன் லாட்ஜ்-க்கு வந்தனர்.

பிறகு திடீரென குழந்தைக்கு உடம்பு சரியில்லை என கூறி 2 பேரும் அந்த குழந்தையை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர்..

eziarasi

டாக்டர்கள் செக் செய்து பார்த்துவிட்டு, அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

இதை கேட்டதும் 2 பேரும் ஷாக் ஆகி, அந்த இறந்த குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து ஓடினர். இதனால் ஆஸ்பத்திரியே பரபரப்பாகிவிட்டது. உடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டது. அவர்களும் ராமதாஸையும் அந்த பெண்ணையும் தேடி வந்தனர். அவர்கள் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில், வேளாங்கண்ணி ஆர்ச் பக்கம் 2 பேரும் நின்று கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கவும், விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். வேளாங்கண்ணி ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போதுதான் அந்த பெண்ணின் பெயர் எழிலரசி என்று தெரியவந்தது. பரமக்குடி பகுதியை சேர்ந்தவர். கணவர் பெயர் மகேந்திரன். 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் மனுஸ்ரீ ஒரு மகளும் இருக்கிறார்கள். மகேந்திரன் சில வருஷத்துக்கு முன்பு இறந்துவிட்டார். தனிமையில் இருந்த எழிலரசிக்கு, ராமதாஸ் போன் மூலம் அறிமுகமானாராம். பிறகுதான் கள்ளக்காதல் பற்றிக் கொண்டுள்ளது.

ramadas

2 பேரும் ஜாலியாக இருக்க வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். சம்பவத்தன்றும் இவர்கள் உறவில் இருந்த போது குழந்தை மனுஸ்ரீ அழுதிருக்கிறாள்.

இதனால் ராமதாஸ் டென்ஷன் ஆகி கோபத்தில் மனுஸ்ரீயை எட்டி உதைத்தாராம்.

அந்த குழந்தை அங்கேயே அப்போதே மயங்கி விழுந்துவிட்டது. பிறகுதான் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்துள்ளனர்.. குழந்தை இறந்துவிட்டது என்று டாக்டர்கள் சொன்னதுமே இந்த ஜோடி பதட்டமாகிவிட்டது. அதனால் குழந்தை சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு, நேராக லாட்ஜுக்கு வந்துள்ளது. தங்கியிருந்த ரூமை அவசர அவசரமாக காலி செய்துவிட்டு, தப்பி ஓடி உள்ளது.

வேறு எங்காவது சென்று தலைமறைவாகி விடலாம் என்று முடிவெடுத்து ஊருக்கு கிளம்பி செல்ல தயாரானபோதுதான் போலீசில் வசமாக சிக்கி கொண்டது தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.