பயணிகள் மீது கொலைவெறி தாக்குதல் புகாரில் கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து….!

Published:

KALLDA T - 2026

பயணிகளை தாக்கிய புகாரில் கேரளாவிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கபடும் கல்லடா டிராவல்ஸ் அனுமதி ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுகிறது.

கேரளாவில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கல்லடா டிராவல்ஸில் மாணவா்கள் சிலர் பயணம் செய்தனா்.

அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து இடையில் நின்றுள்ளது.

இதனையடுத்து மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி பணியாளா்களிடம் பஸ்ஸில் பயணம் செய்த வந்த மாணவர்கள் வலியறித்தியுள்ளனா்.

அப்போது மாணவர்களுக்கும், பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனா்.

அவா்கள் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடித்து வைத்துள்ளனா்.

அத்துடன் பயணிகள் மாற்று பேருந்தில் பயணிக்க ஏற்பாடு செய்யுமாறு ஏஜென்ஸியிடம் அறிவுறுத்தியுள்ளனா்.

அதன்படி மாற்று பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே பேருந்து கேராளவில் விட்டிலா பகுதியை அடைந்தபோது, டிராவல்ஸ் ஏஜென்ஸி பணியாளா்கள் மாணவா்களை தாக்கியுள்ளனா்.

இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகின,

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இதனையடுத்து இதுகுறித்த விசாரணைக்கு போலீசார் மற்றும் அரசுக்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனா்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் கல்லடா டிராவல்ஸின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அனுமதி ரத்து ஒருவருடத்திற்கு பொருந்தும், திருச்சூர் மாநில போக்குவரத்து ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுவரை கல்லடா டிராவல்ஸ் மீது 17 புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img