கீரைகளின் அரசன்.. சக்கரவர்த்திக் கீரையின் பயன்!

சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Chakravarti keerai
Chakravarti keerai

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் வந்தது. இந்த கீரையின் இலை அமைப்பு வாத்தின் கால் போல இருக்கும். சக்கரவர்த்தி கீரையை, பருப்பு கீரை, கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது வயல் வரப்புகளில் தானாக வளரக்கூடியது.

தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது.

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம் சத்து நிறைந்த இது, எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியது. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது.

ரத்த சோகை

நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உணவில் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் ரத்தம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்துகள் தயாரிக்கலாம்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

வயிற்றுப்புண்

நம் உட்கொள்ளும் உணவில் அதிகமாக காரம், மசாலா, சேர்த்து சாப்பிடுவதால் அதிக அமில சுரப்பியால் வயிற்றுப்புண் உண்டாகும். இதை அலட்சியப்படுத்தும் போது தான் அல்சராக மாறுகிறது. இதனால் செரிமானக்கோளாறு, போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் நமக்கு வராமல் இருக்க உணவில் சக்கரவர்த்தி கீரையை எடுத்து கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

இந்தியாவில் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அதிலிருந்து குணமாக சிலர் செயற்கை மருந்துகளை பயன்படுத்துகின்றனர், ஆனால் கீரை மற்றும் இயற்கை மருந்துகளை பயன்படுத்த பலர் மறுக்கின்றனர். ஆனால் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு கீரை வகைகள் நல்ல மருந்தாக இருந்து வருகிறது. அதிலும் சக்கரவர்த்தி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கும்.

மூட்டு பிரச்சனை

மூட்டுவலி அதிகரிக்கும் போது செயற்கை மருந்துகள் உடனடியாக வேலை செய்யாது, அப்போது சக்கரவர்த்தி கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக சூடேறியதும் அதை மெல்லிய துணியில் உருண்டையாக்கி இறுக கட்ட வேண்டும். கட்டிய பின் மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி குறையும். மேலும் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

சிறுநீரக பிரச்சனை

உடலில் நீர்ச்சத்து குறைவதால் சிறுநீர் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனையில் இருந்து குணமாக, சக்கரவர்த்தி கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தபின் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை குணமாகும். மேலும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்தாகவும் இருந்து வருகிறது.

தோல் பிரச்சனை

சக்கரவர்த்தி கீரையை நன்கு அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள புண் மற்றும் தழும்புகள் குணமாகும். மேலும் சொறி, சிரங்கு போன்ற தோல் பிரச்சனகள் குணமாகும்.
சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து உடலில் மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்வதால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.

சக்கரவர்த்தி கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.

சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் விருப்பம் அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

சக்கரவர்த்தி கீரை வயிற்றுப் புண்களை சரி செய்யும் தன்மை கொண்டது.
இந்த கீரை, எலும்புகளை பலமடைய செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.