சாக்கடை பொங்கி வழிந்ததால்… காண்ட்ராக்டரை அமர்த்தி… குப்பைகளை தலையில் கொட்டிய எம்.எல்.ஏ.,!

Published:

shivsena mla contractor
shivsena mla contractor

பொங்கி வழியும் சாக்கடை… காண்ட்ராக்டரை அமர்த்தி குப்பைகளை வாரி அவர்மீது தலையில் கொட்டிய எம்எல்ஏ வின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனா எம்எல்ஏ அதிக உற்சாகத்தை காட்டி டிரைனேஜ் பணிகளை காண்ட்ராக்ட் எடுத்தவரை அழைத்து வந்து சாக்கடை நீரில் உட்கார வைத்த சம்பவம் மும்பையில் நடந்தது. பகிரங்கமாக காண்ட்ராக்டருக்கு தண்டனை விதித்த மக்கள் பிரதிநிதியின் செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆளும் கட்சி எம்எல்ஏ., தான் செய்த செயல் நல்ல செயல் என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டுள்ளார்.

துப்புரவு பணிகளை காண்ட்ராக்ட் எடுத்துக் கொண்ட பின் அதனை சரியாக செய்யவில்லை என்ற பின்னணியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அந்த காண்ட்ராக்டரை சாக்கடையில் அமர வைத்து துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு சாக்கடையில் இருந்து குப்பைகளை வாரி அவர் மீது கொட்டினார். பகிரங்கமாக நடந்த இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.

சிவசேனா எம்எல்ஏ திலீப் லாண்டே செய்த இந்தச் செயல் விவாதத்திற்கு உட்பட்டு பரபரப்பாக பேசப்படுகிறது.

shivsena mla contractor1
shivsena mla contractor1

துப்புரவு கான்ட்ராக்டருக்கு பகிரங்கமாக தண்டனை விதித்தது குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக மும்பையில் பேய் மழை பெய்து வரும் நிலையில் பல சாக்கடைகள் பொங்கி வழிகின்றன. பல சாலைகளில் சாக்கடை நீர் நதி போல் ஓடுகிறது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதனால் கடுப்படைந்த கண்டிவலி சிவசேனா எம்எல்ஏ திலீப் லாண்டே சாலையில் ஓடும் சாக்கடை நீரில் அது தொடர்பான காண்ட்ராக்டரை அழைத்து உட்கார வைத்து துப்புரவுத் தொழிலாளர்களை கொண்டு சாக்கடையிலிருந்து எடுத்த குப்பைகளை அவர் மீது கொட்டினார். தான் செய்தது சரிதான் என்று கூறும் சிவசேனா எம்எல்ஏ, காண்ட்ராக்டர் தன் வேலையை சரியாக செய்யவில்லை என்று எரிந்து விழுந்தார்.

இந்த சம்பவத்தில் எம்எல்ஏ.,வின் நடத்தை குறித்து விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

“இந்தப் பகுதி காண்ட்ராக்டர் தன் வேலையை சரியாகச் செய்யவில்லை. மக்கள் என் மீது உள்ள நம்பிக்கையால் என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால் என் கடமையைச் செய்வதற்காக சாக்கடையை சுத்தம் செய்வதற்காக உள்ளூர் தலைவர்களோடும் சிவசேனா தொண்டர்களோடும் இங்கு வந்தேன்.

சாக்கடை துப்புரவுப் பணிகளை காண்ட்ராக்டரிடம் ஒப்படைத்தோம். ஆனால் அவர் அதனை சரியாக செய்யவில்லை. அதற்காகத்தான் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக நாங்களே வீதியில் இறங்கினோம். அவர் தன் பணியைச் செய்யாததால் இங்கு அழைத்து வந்து உட்கார வைத்து தலையில் குப்பையைக் கொட்டினோம்” என்று கூறினார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

மும்பை கார்ப்பரேஷனில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா அதிகாரம்தான் நடந்து வருகிறது. இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img