
தல’ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘வலிமை’ படத்தின் சில அப்டேட்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கு படமான ‘ஆர்.எக்ஸ்.100’ படத்தின் ஹீரோ கார்த்திகேயா கும்மகொண்டா தான் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் ‘வலிமை’யில் சிக்ஸ் பேக்கோடு வலம் வருகிறாராம்.

அதிலும் அவரது போர்ஷன் முடியும் வரை கடும் டயட்டில் இருந்து நடித்து கொடுத்துள்ளார். இதனை பார்த்து வியந்த அஜித் கடைசி நாள் படப்பிடிப்பின் போது பிரியாணி ட்ரீட் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் மொத்தம் ஐந்து ஃபைட் என பட்டாசாக வடிவமைத்திருக்கிறார்.
லாக்டெளன் முடிந்து மீதமுள்ள பேட்ச் வொர்க்கை ஒரே மூச்சில் ஷூட் செய்து முடித்துவிடுவார்கள் என்கிறார்கள் படக்குழுவினர்.