செப்.17: தமிழகத்தில் இன்று… 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-image
corona-image

தமிழகத்தில் இன்று 5560 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக  59 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில்   இன்று 5560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,25,420  ஆக அதிகரித்துள்ளது! 

சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதையடுத்து இதுவரை  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,560 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 59 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்  இவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 36 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர் இதையடுத்து இதுவரையிலான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,618  ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5524 பேர் குரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதையடுத்து இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,70,192  ஆக அதிகரித்துள்ளது 

 மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

district-wise-corona-details-sep-17
district-wise-corona-details-sep-17

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.