சாக்பீஸில் ஜொலித்த ‘அத்திவரதர்’!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

chalkpiece varathar - 2026

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்று 48 நாட்கள் ஒரு மண்டலம் முடிவடைந்த நிலையில் நிறைவடைந்தது

அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்துக்குள் எழுந்தருள செய்யப்பட்டார். அத்திவரதர் வைபவத்தின்போது மற்ற ஊர்களில் உள்ள அத்திவரதர் விக்ரஹங்கள், அத்தி மரத்தால் ஆன தெய்வ விக்ரகங்கள் என பல தகவல்களை அன்பர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்!

அத்தி வரதரைப் போற்றும் வகையில் அவரது உருவத்தினை புடைவையில் வரைந்து காஞ்சி பட்டுப் புடவை தயாரானது. அதேபோல் அத்தி வரதரை பலர் ஓவியங்களாக வரைந்து சமூகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி கிரிஷ் என்ற இளைஞர் சாக்பீஸிலேயே அத்தி வரதரை வடிவமைத்துள்ளார். சாக்பீஸ் துண்டில் அத்திவரதர் போல் செதுக்கி அதற்கு வண்ணம் கொடுத்து அசத்தியுள்ளார் அந்த இளைஞர். இந்தப் படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.