புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
kudalazhagar-temple
kudalazhagar-temple – மதுரை கூடல் அழகர் திருக்கோயிலில் தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தர்கள்

இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை. இதை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து வருகின்றனர்.

இந்து ஆலய வழிபாட்டு முறைகளில் புரட்டாசி மாதம் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் திருமாலுக்கு உரிய நாட்கள் என்பதால் பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை வழிபட்டு வருகின்றனர். இதை முன்னிட்டு பல்வேறு பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து வருகின்றனர் 

வைரஸ் தொற்று காலம் என்பதால் சமூக தனிநபர் இடைவெளி கடைபிடித்து முக கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் பக்தர்கள் ஆலயங்களில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருப்பதை அதிகாலை முதலே காணமுடிந்தது 

srirangam-temple-darshan
srirangam-temple-darshan

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் காலை முதல் ஆன்லைனில் பதிவு செய்து டிக்கெட் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்காக காத்திருந்தனர்

srirangam-temple-darshan1
srirangam-temple-darshan1

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : புராட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று கோயில் நிர்வாகம் அறிவித்தபடி பக்தர்கள் கோயில் இணையதளம் மூலம் தரிசன நுழைவுச் சீட்டு பெற்று தரிசனம் செய்ய வந்திருந்தனர்

மதுரையில் கூடாழகர் பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி மாதமுதல் சனிக் கிழமையை முன்னிட்டு கொடியேற்றம். நடைபெற்றது அதற்கு பொதுமக்கள் ரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

madurai-thallakulam-perumal
madurai-thallakulam-perumal

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோவில் புரட்டாசி மாத பெருந் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, நீண்ட வரிசையில் நின்று பெருமளை தரிசனம் செய்தனர்.

கோயமுத்தூர் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழாவில் சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.