
திருப்பதி: திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்ட பந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு கடந்த 11-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
மூலவர், துவார பாலகர்கள், விமான வேங்கடேஸ்வர சுவாமி, கருடாழ்வார், வரதராஜப் பெருமான் உள்ளிட்ட சந்நிதிகளுக்காக 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று காலை 10.16க்கு தொடங்கி குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகா சம்ப்ரோக்ஷணத்தை தரிசித்தனர்.



