அதிமுக., 49வது ஆண்டு; கட்சிக் கொடி ஏற்றிய ஓபிஎஸ்., இபிஎஸ்.,!

கோவை சென்னை
admk-flag-49th-day
admk-flag-49th-day

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

சேலம் சிலுவம்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி  கட்சி கொடியேற்றினார் எடப்பாடி பழனிசாமி. 

தற்போது, தாயார் மறைவை ஒட்டி தனது சொந்த ஊரில் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால் தனது சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக., கொடி ஏற்றி வைத்தார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 
அஇஅதிமுக 49-வது ஆண்டு தொடக்கநாளை முன்னிட்டு அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, அதிமுக., கொடி ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.