சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன்
sabarimalai-melsanthi
sabarimalai-melsanthi

சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஸ்ரீ வி கே ஜெயராஜ் போத்தி நம்பூதிரி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மாளிகைபுரம் மேல்சாந்தியாக இருந்தவர்!

சபரிமலை சன்னிதானத்தில் இன்று காலை குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இதில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.  திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேர்முகத்தேர்வு நடத்தி பூஜை செய்பவர்களைத் தேர்வு செய்யும். அவர்களில்  ஒருவர் சன்னிதானத்தில் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம் . 

அதன்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற குலுக்கள் முறையிலான தேர்வில், சபரிமலை சந்நிதிக்கு ஜெயராஜ் போத்தியும் மாளிகைபுரத்துக்கு ரெதிக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்கும் இவர்கள் ஓர் ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி இருந்து பூஜைகள் செய்வர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.