முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்
Seenuramasamy 2
Seenuramasamy 2

முதல்வர் ஐயா என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

தமிழ் சினிமாவில் நன்கு அறிந்த பலருக்கும் அறிமுகமான இயக்குனராக இருப்பவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

https://twitter.com/seenuramasamy/status/1321304921929637892

இந்நிலையில், இன்று காலை சீனு ராமசாமி டிவிட்டர் பக்கத்தில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம் என பதிவிட்டுள்ளார்.

அண்மையில், விஜய் சேதுபதி நடிக்க இருந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டிவிட்டர் பதிவு இட்டிருந்தார் சீனு ராமசாமி. அவர் ஏன் இப்படி அலறல் சவுண்டு விட்டிருக்கிறார் என்பது புரியாத புதிராக இருப்பதால், அவரது டிவிட்டர் பதிவுக்கு கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.