விராட் மற்றும் தமன்னா மீது புகார்!

Published:

virt thamanna - 2026

கொரோனா ஊரடங்கால், ஆன்லைன் மூலமாக ஏ ராளமான சூதாட்டங்கள் அறிமுகமாகி விளையாடப்பட்டு வருகிறது. அதிலும், அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் இ த்தகைய ஆன்லைன் சூதாட்டங்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் அடிமையாகி உள்ளனர்.

koli - 2026

இதனால் பலரும் பெருமளவில் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் சமீபத்திலும் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்த 20 வயது கல்லூரி மாணவர் மன உ ளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

koli 1 - 2026

இந்நிலையில், தமிழகத்தில் மொபைல் பிரீமியர் லீக் சூதாட்டங்கள், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் எனவும்.

அதற்கான விளம்பரங்களில் நடித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img