துரைக்கண்ணு மரணம் குறித்த அவதூறு… ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்!

திருச்சி
vijayabhaskar
vijayabhaskar

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துக்களைக் கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் அரசியல் ஆதாயம் கருதி அண்மையில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு குறித்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டி கருத்து வெளியிட்டார் இதுகுறித்து அவர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் 

இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வருகிற 16-ம் தேதி வெளியிடப்பட்டு, ஓரிரு நாளில் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறினார் அமைச்சர்  விஜயபாஸ்கர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.