புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள அகதி முகாம் உள்ளது இந்த முகாமில் 233 வீடுகள் உள்ளநிலையில் நடராசன்,ஜனார்த்தனன்,இந்திராணி,சுப்ரமணியன் ஆகிய 4 பேர்களில் ஒட்டு வீட்டின் மேற்கூரை சரிந்தது இதில் நடராசன் மற்றும் இந்திராணிக்கு உள்காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்கு சென்றனர் இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.




