சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. பேனரை கிழித்த நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதுபோல், சென்னையில் வைக்கப்பட்டிருந்த கிழிக்கப்பட்ட அந்த பேனரில் காவிரி எங்கே என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 12 ஆம் தேதி பாதுகாப்புதுறை கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்துக்கு வருகின்றார்.
இந்நிலையில், கிழிக்கப்பட்ட பேனர்களை அகற்றி புதிய பேனர்கள் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.





