ஐபிஎல்., போட்டியை சென்னையை விட்டு மாற்றும் திட்டமில்லை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் விளையாட்டு

ipl cauvery - 2026

சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை திருவனந்தபுரம் மைதானத்திற்கு மாற்ற திட்டமிட்டு வருவதாக ஒரு செய்தி இன்று ஊடகங்களில் பரவியது.

காவிரி விவகாரம் ஐபிஎல்.,லுடன் இணைந்து பேசப்பட்டு வருவதால், போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் ஐபிஎல் போட்டி நடப்பது நல்லதல்ல என்று அரசியல் மட்டத்தில் கருத்துகள் கூறப்பட்டன.

இதை அடுத்து, ஏப்ரல் 10ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் திருவனந்தபுரத்திற்கு மாற்ற ஆலோசனை நடத்தப் பட்டு வருவதாக தகவல் பரவியது.

ரெம்ப சந்தோசம் எதெல்லாம் அனுப்ப முடியுமோ அதெல்லாம் அனுப்பி வைக்கிறவன்தான் டமிலன் என்று இந்தத் தகவல் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவின.

இந்நிலையில், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.