ரசிகர்களின் கைத்தட்டலை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தனம்: தேவா அறிவுரை

கிசுகிசு கோவை சினிமா லைஃப் ஸ்டைல்

சேலம்: ரசிகர்களின் கைத் தட்டலை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தம் என்று இசையமைப்பாளர் தேவா அறிவுரை கூறியுள்ளார்.

சேலம் வந்திருந்த தேவா, நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘கலைமாமணி விருது’களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் விஷால் அரசியலில் ஈடுபடுவது ஆண்டவன் செயல். அது அவரது பூர்வ கர்மம், புண்ணியத்தை பொறுத்தது. நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும் என்பார்கள். தெரிந்ததை விட்டவனும் கெட்டான், தெரியாததை தொட்டவனும் கெட்டான் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். கலைஞர்கள், நடிகர்களுக்கு எழும் கைத் தட்டல்கள் எல்லாம் ஓட்டுகளாக மாறாது. என்னைப் பொறுத்தவரை ரசிகர்களின் கைத்தட்டலை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தனம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.