பழனி தைப்பூசம்… துணை முதல்வர் ஓபிஎஸ்., சுவாமி தரிசனம்!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
ops paalni thaipoosam - 2026

பழனி தைப்பூசத் திருவிழாவில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.

தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதை முன்னிட்டு, முருகனின் அறுபடை வீடுகளான பழநி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை, திருத்தணி என அனைத்து தலங்களிலும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் இன்று காலை தைப்பூசத்தை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.